உள்ளூர் செய்திகள்
கிராமசபை கூட்டம் நடந்தது.

37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள்

Published On 2022-04-25 14:55 IST   |   Update On 2022-04-25 14:55:00 IST
சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு திமுக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். 

சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜய்யேஸ்வரன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை குறித்து எம்.எல்ஏ.விடம் எடுத்துரைத்தனர். அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார். 

இதேபோல் திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
 
அகணி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமையிலும், நிம்மேலி ஊராட்சியில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையிலும், செம்மங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமையிலும், விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமையிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

Similar News