உள்ளூர் செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேம்பத்தூரில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகிஅம்மன் சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் 88 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 6ந்தேதி நடந்தது.
இதையடுத்து 48ம் நாள் மண்டல பூஜை விழாவில் சிவபுராண பாராயணம், கணபதி ஹோமம் , மகா அபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் இரவு திருவிளக்கு பூஜை வழிபாடும் நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அம்மன் தெற்கு நோக்கியும், பிரம்மா தனி சன்னதியிலும், நவகிரகங்களில் புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சி தருவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து வேம்பத்தூருக்கு பஸ் வசதி உள்ளது.