உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் கண்காட்சி
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் குறித்த மாபெரும் கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக நடத்தப்படுகிற கண்காட்சிகளில் அறிவியல் செய்முறைகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.
அனால் இந்த கண்காட்சியில் அறிவியல் மட்டுமல்லாது தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கணிணியியல் என அனைத்துப் பாடத்திற்குமான அறிவினை செய்முறையினை மாணவர்கள் வெளிப்படுத்திட வேண்டும் என்று பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி ஏற்பாடு செய்திருந்த மாணவர்களின் இந்த கண்காட்சியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்களின் திறமைகள் நம்மை வியக்க வைக்கின்றன. மாணவர்கள் தங்கள் படைப் பாற்றலை விளக்கும் விதமும், மொழி ஆளுமையாகவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
படைப்பா£ற்றல் திறமைகளைப் பாராட்டுவதோடு மாணவர்கள் கட்டிக் காக்கும் ஒழுக்கத்தையும் மனதாரப் பாராட்டுகிறேன். பள்ளி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி பாரட்டினார். பாடவாரியாக வகுப்பறைகள் ஒதுக்கபட்டு மாணவர்கள் செய்முறைகளை காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர்.
கண்காட்சியில் உலகின் 7 அதிசயங்களில் சீனப்பெருஞ்சுவர், தாஜ்மகால் மற்றும் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை மற்றும் ஏராளமான செய்முறைகள் இடம் பெற்றன. கண்காட்சியில் அனைவருடைய பார்வையையும் கவர்ந்த செங்கோட்டையை உருவாக்கிய மாணவன் ராகவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மழலையர் வகுப்புகளில் மாணவர்கள் சமூக கடமையாற்றுகின்ற மருத்துவர்கள் காவலர்கள் ராணுவ வீரர்கள் உடையணிந்து வந்திருந்த தங்கள் கடமைகளை மழலை மொழியில் விளக்கியது காண்போரைக் கவர்ந்தது.
கண்காட்சியில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த புதுகை நகருக்கு பெருமை சேர்க்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் செல்பி பாயிண்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.