உள்ளூர் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம்
மணமேல்குடி அருகே வெள்ளூரில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகேயுள்ள வெள்ளூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர் தலைமை தாங்கினார்.
ஒன்றியக் குழு உறுப்பினர் கலைச்செல்வி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கமலவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் ராஜாராமன், கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் இளையராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள், சுய உதவிக்குழுவினர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளித்தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார். வெள்ளூர் நடுநிலைப் பள்ளியின் புதிய பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரஞ்சிதா ஆறுமுகம், துணைத்தலைவராக நிரோஷா மாரிமுத்து மற்றும் 18 உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெய ஜோதிமணி, சுவாமிநாதன், மனோஜ் குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை சங்கீதா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பள்ளி மேலாண்மை குழு சார்பில் நடத்தப்பட்டது.