உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி புனித அற்புதமாதா நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்ற போது எடுத்த படம்.

புனிதஅற்புத மாதா பள்ளியில் ஆண்டு விழா

Published On 2022-04-24 12:49 IST   |   Update On 2022-04-24 12:49:00 IST
ஆலங்குடி புனிதஅற்புத மாதா பள்ளியில் ஆண்டு விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:

ஆலங்குடி புனித அற்புதமாதா நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில்நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஆர்.கே.குழந்தைசாமி அடிகளார்  தலைமை வகித்தார்.

பேரூராட்சி தலைவர் ராசிமுருகானந்தம் மற்றும் துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் அருள்அமுதாராணி அனைவரையும் வரவேற்றார்.  

திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சூசைராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.  

உதவி பங்குத்தந்தை கித்தேரிமுத்து, பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் அருளானந்து  மற்றும் அரசடிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ஆல்பர்ட் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியை மரியம்மாள் நன்றி கூறினர்.

Similar News