உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

விளையாட்டை பொறுத்தவரை இடைவிடாத பயிற்சி அவசியம் - முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா பேச்சு

Published On 2022-04-24 11:38 IST   |   Update On 2022-04-24 11:38:00 IST
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு இல்லை. 1986ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா, 14வது இடத்தில் இருந்தது.
திருப்பூர்:

திருப்பூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் ‘தங்கமங்கை’, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு இல்லை. 1986ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா, 14வது இடத்தில் இருந்தது. நான் ஐந்து தங்கப்பதக்கம் வென்றபிறகு 4-வது இடத்துக்கு முன்னேறியது. விளையாட்டு மைதானம் இல்லை.விளையாட்டு உபகரணங்கள் இல்லை. பயிற்சியாளர் இல்லை.

பெற்றோரின் ஊக்கமும், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்ததால், விளையாட்டுத்துறையில் முன்னேறலாம். விளையாட்டை பொறுத்தவரை இடைவிடாத பயிற்சி அவசியம். குறுகிய காலத்தில் வெற்றியை ஈட்டுவது சிரமம். 

தொடர் பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும். ஆசிரியர், பெற்றோரின் ஊக்கம், விளையாட்டு வீரர், வீராங்கனைகளை சாதனை படைக்க வைக்கும். தற்போது கல்வியுடன், விளையாட்டும் கற்பிக்கப்படுகிறது. இன்றைய மாணவர்கள், ஏதாவது ஒரு பிரிவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News