உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 67 பேருக்கு பணி வாய்ப்பு

Published On 2022-04-24 05:46 GMT   |   Update On 2022-04-24 05:46 GMT
ஒவ்வொரு துறையினரும் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடு வழங்கப்படும் சம்பளம் குறித்து விளக்கினர்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது. அவிநாசி சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஜோசப் தலைமை வகித்தார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் தொடங்கி வைத்தார். அவிநாசி பி.டி.ஓ., மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், எல்.ஐ.சி.. மற்றும், 15 தனியார் நிறுவனங்கள், 4 பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. 

ஒவ்வொரு துறையினரும் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடு வழங்கப்படும் சம்பளம் குறித்து விளக்கினர்.முகாமில் 466 பேர் பங்கேற்றனர். இதில் 67 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதில், 13 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது. 

பல்வேறு துறை சார்ந்த பயிற்சிக்கு 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மகளிர் திட்ட வட்டார மேலாளர் பழனியம்மாள் மற்றும் ஒருங்கிணைப் பாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News