உள்ளூர் செய்திகள்
பட்டா கணினி திருத்தம் முகாம்

ஒழுகமங்கலம் ஊராட்சியில் பட்டா கணினி திருத்த முகாம்

Published On 2022-04-23 16:46 IST   |   Update On 2022-04-23 16:46:00 IST
ஒழுகமங்கலம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஒழுகமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், ஒவலிபட்டி, ஒழுகமங்கலம் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமின் முன்னதாக வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலையில இப்பகுதிக்கு உட்பட்ட விளை நிலங்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றிற்கான பெயர் திருத்தம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கணினி சம்பந்தப்பட்ட திருத்தங்களுக்காக பயனாளிகளிடமிருந்து சுமார் எட்டு மனுக்கள் பெறப்பட்டு அதில் உடனடியாக 3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும் மீதமுள்ள மனுக்களுக்கு வருவாய்த் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் ரிஹானா பானு, உதவியாளர் முகமது அலி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனிச்சாமி, வார்டு உறுப்பினர்களாக ஆறுமுகம், சந்திரா, பொன்னாள், சந்திரன், தனலட்சுமி, செயலர் பாண்டியன், பணித்தள பொறுப்பாளர் பாண்டிச் செல்வி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் முகாமில் பங்கேற்றனர்.

Similar News