உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம், போதை பழக்கத்தை அடியோடு ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆவுடையார்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினார்கள்.
பேரணியை அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் துவக்கி வைத்தார்.அறந்தாங்கி காவல்துணைத் கண்காணிப்பாளர் தினேஷ்குமார், வட்டாட்சியர் வெள்ளைச்சாமி,
கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியானது ஆவுடையார்காவில் கடை வீதிவழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.