உள்ளூர் செய்திகள்
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தனியார் பள்ளியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை :
ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு கடைபிடிக்கத் தொடங்குவர், ஒரு மாதம் நடைபெறுகின்ற நோன்பு நிகழ்வில் மாலையில் ஒரு வேளை மட்டும் பேரீட்சைப்பழம், கஞ்சி உள்ளிட்ட ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதில் ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கென இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை வகிக்க பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதில் இஸ்லாமியர்கள், பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு விருந்தோம்பினர்.
முன்னதாக அஜ்ரத் எனும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரிசண்முகநாதன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், ஒன்றியக்-குழு துணை தலைவர் ஜெயசுதாபொன்கணேசன்,
நகர்மன்ற துணைத் தலைவர் முத்து, ஜமாத் தலைவர் ஷேக் அப்துல்லா, கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர்கள் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், ஜமாத்தார்கள், ரோட்டரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வர்த்தக சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.