உள்ளூர் செய்திகள்
கிராமசபை கூட்டம்.

கிராம சபை கூட்டம்

Published On 2022-04-23 15:31 IST   |   Update On 2022-04-23 15:31:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (24ந்தேதி) கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ந்தேதி கொண் டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக நாளை (24ந்தேதி) நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராமசபைக் கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களில், தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை (24ந்தேதி) காலை 11 மணியளவில், கிராமசபை கூட்டம் நடத்திடவும், கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த 17கூட்டப்பொருள்கள் மற்றும் 9 இலக்குகள் பற்றி விவாதிக் கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிடவும், உறுதிமொழி எடுக்கவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமசபை கூட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும் மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (24ந்தேதி) கிராமசபைக் கூட்டத்தினை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவும், கிராமசபை நெறி முறைகளை பின்பற்றவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (கிராம ஊராட்சிகள்) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News