உள்ளூர் செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

திருக்கோவிலூர் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2022-04-22 15:46 IST   |   Update On 2022-04-22 15:46:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் காங்கேயனூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது நிரம்பிய சிறுமிக்கும், திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள கூவனூர் கிராமத்தில் வசிக்கும் சித்திரவேல் (வயது 26). என்பவருக்கும் திருக்கோவிலூர் வட்டம் கூவனூர் கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி அதிகாரிகள் விரைந்து சென்று குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து சிறுமியை விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து கலெக்டர் கூறுகையில், இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான திருமணங்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் 1098 என்ற சைல்டு லைன் மூலமாகவும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Similar News