உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-22 15:45 IST   |   Update On 2022-04-22 15:45:00 IST
சங்கராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சங்கராபுரம் வட்டக்கிளை சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம்:

சங்கராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சங்கராபுரம் வட்டக்கிளை சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவை கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண் விடுப்பு உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கியது போல் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். 

வட்ட செயலாளர் பாசில் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட தலைவர் ராமஜெயம் ஆகியோர் கவனஈர்ப்பு உரையாற்றினர். இதில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் வட்ட தலைவர் விஸ்வநாதன், இணை செயலாளர் பிரபாகரன், வட்ட பொருளாளர் பாலமுருகன், வருவாய்த்துறை நிர்வாகிகள் கல்யாணி, இளையராஜா, தினேஷ், சுகாதாரத்துறை நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News