உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

Published On 2022-04-22 15:20 IST   |   Update On 2022-04-22 15:20:00 IST
கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதி பி.மாத்தூர் பகுதியை சேர்ந்த வெங்-கடாசலம் மகன் சிவசங்கர்-(வயது29) இவர் பழனியப்பா கார்னர் பகுதியில் பெட்டி கடைக்கு சென்ற-போது திருவப்பூர் சௌராஷ்டரா கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுச்-சாமி மகன் சாத்து என்கிற யோகேஸ்வரன்(23), லெட்சுமிபுரம் 1ம் வீதியை சேர்ந்த சுரேஷ் மகன் சக்திவேல் என்கிற அஞ்சான் சக்தி (19), திலகர் திடல் பகுதியை சேர்ந்த பாபு மகன் ஜெயராமன் என்கிற சோனி(19) ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு சிவசங்கர் கொடுக்க மறுக்கவே அவரது பையில் இருந்த ரூ.2000 ஆயிரத்தை கத்திகளை காட்டி மிரட்டி பறித்துள்ளனர்.

இதுகுறித்து சிவசங்கர் கொடுத்த புகாரின்-பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்-சந்திரன் மூன்று பேரை கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீதுகொலை, கொலை முயற்சி, ராப்பரி என பல வழக்குகள் உள்ளன.

Similar News