உள்ளூர் செய்திகள்
பெண் குழந்தை மர்மச்சாவு நடவடிக்கை கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிபட்டியை சேர்ந்தவர் கந்தசாமி, இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த தம்பதியினர் கருத்துவேறுபாடினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கந்தசாமியிடம் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும், கவிதாவிடம் ஒரு பெண் குழந்தையும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கந்தசாமியிடம் இருந்த பிரதிஷா என்ற 8 வயது பெண் குழந்தை, தலைவலியினால் பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காதில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த கவிதா, மகள் பிரதிஷா சாவில் மர்மம் உள்ளது, அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதி, சிறுமி பிரதிஷாவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த பிரதிஷாடனர்.