உள்ளூர் செய்திகள்
பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள் பாய்ந்து வந்த காட்சி.

மாட்டுவண்டி பந்தயம்

Published On 2022-04-22 15:06 IST   |   Update On 2022-04-22 15:06:00 IST
திருப்பத்தூரில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள பூமாயிஅம்மன் கோவிலின் 88ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 35ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 

திருப்பத்தூர் அண்ணா சாலையில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை நடந்த இந்த பந்தயம் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது. 

இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாட்டுவண்டிபந்தய  கமிட்டி குழு தலைவர் எம்.ஆர். பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன், முன்னாள் ஒன்றிய  தலைவர் கரு.சிதம்பரம், ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், மாட்டு வண்டி பந்தய  மாநில தலைவர் எஸ்.கே மோகன சாமி, மாவட்ட தலைவர் நகரம்பட்டி வைத்தியர், மற்றும்  மாட்டுவண்டிபந்தய விழாக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

நடுமாடு, பெரியமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டுமாடு, என  பலதரப்பட்ட இன ரக மாட்டு ஜோடிகளுடன் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை 2 ஜோடிகளுக்கும்,   இன்றுகாலை 2 ஜோடிகளுக்கும் பந்தயம் நடைபெற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுத் தொகையும் முதலிடத்தை பிடித்த வீரர்களுக்கு பரிசு கோப்பையும், வழங்கப்பட்டது.

Similar News