உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலுனுடன் ஓட்டம்- வாலிபர் தற்கொலை

Published On 2022-04-22 11:56 IST   |   Update On 2022-04-22 11:56:00 IST
கோவளம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலுனுடன் ஓட்டம் பிடித்ததால் மனவேதனையடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம்:

சென்னை, கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் மதுரமுத்து (வயது ). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற இருந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் திடீரென தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் திருமணம் நின்று போனது. புதுமாப்பிள்ளை மதுர முத்து மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இதற்கிடையே வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுரமுத்து பின்னர் திரும்பி வரவில்லை. அவளை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவளம் அடுத்த வடநெம்மெலி, கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள மரத்தில் மதுரமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.

அவரது உடலை மாமல்லபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News