உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

Published On 2022-04-22 02:57 GMT   |   Update On 2022-04-22 06:53 GMT
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கு பெறவிருக்கிறார்கள்.
சென்னை:

இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது.

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதிலே பங்கு பெறவிருக்கிறார்கள்.

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று அறிவித்தார்.

இதன் மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அவரது அறிவிப்புக்கு இணங்க 24 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:-

1. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்- தலைவர்

2. எ.வ.வேலு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

3. அமைச்சர் மெய்யநாதன் - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

4. அமைச்சர் மதிவேந்தன்- சுற்றுலாத்துறை

5. ஆ.ராசா எம்.பி.

6. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

7. தலைமைச் செயலாளர் இறையன்பு

8. டி.ஜி.பி. சைலேந்திரபாபு

9. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

10. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

11. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

12. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர்

13. சிறப்புத்திட்ட அமலாக்கம் (எப்.ஏ.சி.) முதன்மை செயலாளர்

14. சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர்

15. தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அரசு செயலாளர்

16. கூடுதல் காவல்துறை இயக்குனர்- தமிழ்நாடு காவல் துறை அகாடமி இயக்குனர்

17. உறுப்பினர் செய லாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

18. பொதுத்துறை அரசு செயலாளர்

19. கமிட்டியின் உறுப்பினர் செயலர்- சிறப்புப் பணி அதிகாரி

20. அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர்

21. அகில இந்திய செஸ் சம்மேளன செயலாளர்

22. அகில இந்திய செஸ் சம்மேளன பொருளாளர்

23. தலைவர் தமிழ்நாடு செஸ் அசோசியேஷன்

24. டாக்டர் அசோக் சிகாமணி துணைத்தலைவர்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.92.13 கோடிக்கான நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News