உள்ளூர் செய்திகள்
கைது

சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர்கள் கைது

Published On 2022-04-21 15:47 IST   |   Update On 2022-04-21 15:47:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கேட்டவரை தாக்கியது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சே‌ஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28), திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(25), இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

மணிகண்டன், ஜெயஸ்ரீக்கு கடனாக 30 ஆயிரம் கொடுத்திருந்தார். அதில், 20 ஆயிரம் ரூபாயை ஜெயஸ்ரீ கொடுத்த நிலையில், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை மணிகண்டன் போனில் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த ஜெயஸ்ரீயின் ஆண் நண்பரான டி.அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ரெமஷியஸ் (28) மொபைல் போன் மூலம் மணிகண்டனிடம் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரெமஷியஸ் தனது நண்பர்கள் சந்தைப்பேட்டை கண்ணன் மகன் வினித் விஜய்(27), டி.அத்திப்பாக்கம் ஜோசப் கென்னடி(28) ஆகியோருடன் சென்று, மணிகண்டனை இரும்பு ராடு மற்றும் சுத்தியால் தாக்கினர்.

மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, ரெமஷியஸ், ஜோசப் கென்னடி ஆகியோரை கைது செய்தனர். வினித் விஜயை தேடி வருகின்றனர்.

Similar News