உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே வாகனம் மோதி பக்தர் பலி

சங்கராபுரம் அருகே வாகனம் மோதி பக்தர் பலி

Published On 2022-04-20 17:17 IST   |   Update On 2022-04-20 17:17:00 IST
சங்கராபுரம் அருகே வாகனம் மோதி பக்தர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

திருப்பூரைச் சேர்ந்தவர் திருமலைவாசன் (வயது 51) இவர், குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, அவருடைய மாருதி காரில் திருப்பூர் சென்றார். அப்போது சங்க ராபுரம் அருகே மூங்கில் துறைப்பட்டு வந்த போது, சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இயற் கை உபாதைக்காக சென்றவர், மீண்டும் காருக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் படு காயமடைந்த திருமலை வாசன் திருவண் ணாமலை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந் தார். இது குறித்து மூங்கில் துறைப்பட்டு போலீ சார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News