உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

Published On 2022-04-20 15:44 IST   |   Update On 2022-04-20 15:44:00 IST
பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சார்பு நீதிபதி தெரிவித்தார்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்-பள்ளியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்தான சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்-புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசுகையில், அச்சம் என்பது குற்றங்களுக்கான முதன்மை காரணமாக உள்ளது. எனவே அச்சம் தவிர்த்து பள்ளி குழந்தைகள் தன்னம்-பிக்கை கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

குற்றங்கள் நடக்கும் போது குற்றத்தினை தடுத்திடும் மன வலிமையை வளர்ப்பதோடு, குற்றத்திற்கு எதிராக அவற்றினை சட்ட வழியில் தடுத்திடும் வழிகளையும் கற்றறிந்திருக்க வேண்டும். ஆண் பெண் பாகுபாடுகள் இல்லாத சமுதாயம் உருவாக அதற்கான முயற்சிகள் குடும்பங்-களிலுருந்து தொடங்--கப்பட வேண்டும்.

மாணவர்கள் மதிப்-பெண்கள் பெறுவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் சமூகத்தில் ஏற்படும் வன்-கொடு-மைகளை களைவதற்கு உண்டான தலைமை பண்-பிற்கான ஆளுமையினை வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்போன் போன்ற கருவிகளை பயன்-படுத்தும் போது அதற்கு அடிமையாகாமல் அறவழியினை கற்று வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கிடும் மன உறுதியினை மாணவர்-கள் கொள்ள-வேண்டும். 

கல்வி-யோடு விளை-யாட்டிலும் மாணவர்கள் குழுவாக இணையும் போது அவர்-களுக்குள் சமநிலையான எண்ணங்கள் உருவாகும் என தெரிவித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சட்டம் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், அரசின் நலத்-திட்டங்கள் குறித்தும் பேசினார். 

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏட்டு மருதமுத்து, ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர்கள் கீதா, ஷீபா, பாலரி-யாஷினி ஆகியோர் பெண் குழந்தைகள் பாது-காப்பு குறித்து பேசினர். இதில் பள்ளி மாணவ-,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து-கொண்டனர். முன்னதாக பள்ளி தலை-மையாசிரியர்  கஜபதி வரவேற்றார். முடிவில் உதவி தலைமை-யாசிரியர் ரவிச்-சந்திரன் நன்றி கூறி-னார்.

Similar News