உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-04-20 15:37 IST   |   Update On 2022-04-20 15:37:00 IST
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சார்பில் செங்குணம் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பெண் குழந்தைகள் பாது-காப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாண்டியன் தலைமை வகித்தார். ஏட்டு மருதமுத்து, போலீஸ் சுமா, ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர் கீதா மற்றும் அவரது குழு-வினர்-கள் மாணவி-களுக்கு பெண்கள் மற்றும் குழந்-தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்-புணர்வு ஏற்படுத்தியும், 

போலீஸ்-ஸ்டேசனில்  செயல்-படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்-பேசி எண் 181, குழந்தை-களுக்கு எதிரான குற்றச்-சாட்டுக்-களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண், பள்ளி குழந்தைகளின் பாது-காப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 எண்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதில் பள்ளி மாணவிகள், ஆசிரியையகள் கலந்து கொண்டனர்.

Similar News