உள்ளூர் செய்திகள்
நகை கடன் ரசீதுகளுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

நகைகள் மாயம்

Published On 2022-04-19 16:42 IST   |   Update On 2022-04-19 16:42:00 IST
மானாமதுரை அருகே அடகு வைத்த நகைகள் மாயமானதால் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை வேளாண்மை கூட்டுறவுசங்கத்தில் அடமானம் வைத்த நகைகள் மாயமானதால் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். 

கீழப்பசலையில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க செய லாளர்கள்,  தலைவர்கள் கூட்டணி அமைத்து விவசாயிகளின் நகைகளை அடமானம் வாங்கி போலி ரசீதுகள் கொடுத்துள்ளனர். 

விவசாயிகள் சிறுக, சிறுக பணம் சேர்த்து வாங்கிய தங்க நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடன் 5 பவுன் நகை தள்ளுபடி திட்டத்தை அறிவித்தவுடன் விவசாயிகள் நகைகளை திரும்ப கேட்டதும் இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

நகைகடன் தள்ளுபடியில் உண்மையான விவசாயி களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். 

கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் ஊழியர்களே வெவ்வேறு பெயர்களில் நகைகளை அடமானம் வைத்து தள்ளுபடி பெற்றுள்ளனர். தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர்களை வங்கியின் பெயர் பலகையில் ஒட்டவேண்டும் என்ற விதிகயையும் மீறியுள்ளனர். 

இன்று வரை நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர்களை வங்கி நிர்வாகம் வெளியிட வில்லை. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களிடம் நகை கடன் தள்ளுபடி மற்றும் அடகுவைத்த நகைகளை கேட்ட போது, தரமறுத்ததுடன் அடகு ரசீதுகளில் உள்ள பெயர்களையும் அழித்துள்ளனர்.  

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வா கத்திடம் புகார் செய்தனர். மேலும் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளனர்.  இதுவரை ரூ.3 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ள தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  

தமிழக அரசு முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள்மீதும் கூட்டுறவு வங்கிகளின் தலைவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Similar News