உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வேப்பூர் அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.
பெரம்பலூர்:
குன்னம் அடுத்துள்ள வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது.முகாமை கல்லூரி முதல்வர் மீனா தொடங்கி வைத்தார்.
முகாமில் இளங்கலை மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவிகள் 303 பேர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐ&போன், ஆர்எஸ்எம்பிஎல், பிஒய்டி உள்ளிட்ட மூன்று செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டன.
சான்றிதழை மாணவிகளுக்கு செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் பவானி மற்றும் கல்லூரி முதல்வர் மீனா ஆகியோர் வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை முனைவர் மணிகண்டன் செய்து இருந்தார்.