உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கலப்பட நெய் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம்

Published On 2022-04-19 11:54 IST   |   Update On 2022-04-19 11:54:00 IST
நெய் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் கலப்படமில்லாத சுத்தமான வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலப்பட நெய் விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. 

உணவுப்பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது, கடைகள் தோறும் ஆய்வு மேற்கொண்டாலும் போலி நெய் தயாரிப்புகளை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் என பலர் பூஜை நெய், தீப நெய் என்ற பெயரில் தொடர்ந்து கலப்பட நெய் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் கலப்பட நெய் குறித்து புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:-

நெய் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் கலப்படமில்லாத சுத்தமான வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். 

பொதுமக்களும் ‘அக்மார்க்‘ சான்று பெற்ற தரமான நெய்யை இனம் கண்டு வாங்க வேண்டும். பெயரில்லாத தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாத நெய்யை வாங்குவதை தவிர்க்க வேண்டும். 

விலை குறைவானது என்று தரமற்ற கலப்படமான நெய்களை வாங்கி பயன்படுத்தக்கூடாது. நெய் வாங்கும் போது அவை உணவு பாதுகாப்பு துறை வாயிலாக பதிவு உரிமம் எண் பெற்றுள்ளதையும், பேக்கிங் செய்யப்பட்டுள்ள நெய்யில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை உள்ளதையும் உறுதி செய்ய வேண் டும். 

பேக்கிங்கில் சிறிய எழுத்தில் ‘தீபநெய்’ என்று பிரிண்ட் செய்த நெய்யை கண்டிப்பாக உணவு உபயோகத்திற்கு வாங்கக்கூடாது. 

கலப்படமான தரமற்ற நெய் விற்பதை கண்டறிந்தால் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News