உள்ளூர் செய்திகள்
பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

சமூக வலைதளம் மூலமாக காதலித்த ஜோடி- பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2022-04-18 17:03 IST   |   Update On 2022-04-18 17:03:00 IST
சமூக வலைதளம் மூலம் காதலித்த ஜோடி பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 25). இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிரமை அதிகம் பயன்படுத்தி வருகிறார். 

இதே வலைதளத்தை பயன்படுத்தி வந்த கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்த்த கவிதா (20) என்பவருக்கும் யூசுப்புக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் கவிதா கடந்த 16-ந் தேதி காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பெங்களூரிலிருந்து புறப்பட்டு காதலன் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த காதல் ஜோடி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார்கள்.

Similar News