உள்ளூர் செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம்,
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிணவறை அருகே சலவை செய்யும் பகுதி உள்ளது.
அதன் அருகில் மின் வயர்கள் செல்கின்றன. நேற்று பெய்த கனமழைக்கு நீர் கசிவு ஏற்பட்டு வயர்களில் ஈரமாக இருந்தது.
இன்று காலை வழக்கம்போல் பணி செய்யும்போது எலெக்ட்ரிக் வயர்கள் உரசி தீப்பிடித்தது. ஊழியர்கள் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்தை விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் அந்த வயர்களை அகற்றினர்.உடனடியாக வந்து தீயை அனைத்தால் அசாம்பவிதங்கள் தவிர்க்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.