உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளை

Published On 2022-04-18 15:53 IST   |   Update On 2022-04-18 15:53:00 IST
அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம் பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்
திருச்சி :

திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம் பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அம்பிகாபுரம் இந்திரா தெருவில்  அரிசி மண்டி ,  பால் விற்பனையகம், எண்ணெய் கடை உள்ளிட்ட 5 கடைகள் உள்ளது. இந்த கடைகளில் இரவில் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம் பொருள் திருடிச் சென்றனர்.  

அரிசி கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம்  மற்றும் டிவியை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோன்று மற்ற கடைகளில் வைக்கப்பட்டிருந்த பணம், பொருட்கள்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News