உள்ளூர் செய்திகள்
திருவையாறில் நெருக்கடியாக வரிசை கட்டி செல்லும் கார்கள்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்

Published On 2022-04-18 15:52 IST   |   Update On 2022-04-18 15:52:00 IST
திருவையாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு:

திருவையாறு நகரம் முழுவதுமே போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. பைபாஸ் ரோடு போடுவது ஒன்று தான் போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு என்னும் பிம்பம் உருவாக்கப்ட்டிருக்கிறது. 

ஆனால், நகருக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லாத கனரக வாகனங்கள், வெளியூர் பஸ்கள் மற்றும் கார்கள் மட்டுமே பைபாஸ் ரோடில் பயணிக்க வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் சரிசெய்து விட முடியாது. இதற்கான முக்கிய காரணம் திருவையாறு பஸ்ஸ்டாண்டு பைபாஸ் ரோட்டுடன் தொடர்புடையதாக மாற்றி அமைக்கப்படுவதற்கான திட்டம் எதுவும் இதுவரையில் வகுக்கப்படவில்லை. 

மேலும், திருவையாறு நகருக்குள் நுழையும் பஸ்களும் கார்களும் சரக்கு லாரிகளும் நெருக்கடி மிகுந்த கடைவீதியில் ஆங்காங்கே வெகுநேரம் நிறுத்தப்-படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாலையின் ஓரத்தில் வெள்ளைக் கோட்டுக்கு இடது புற நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பூ மற்றும் பழக்கடைகளாலும், கடைக் கட்டிடத்துக்கும் வெளியே விளம்பர பலகைகளாலும், கல், மண் மேடுகளாலும் ரோடின் இருபுறமும் பாதசாரிகளும் இருசக்கர வாகனங்களும் ஓரமாகச் செல்லமுடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. 

நகருக்குள் வாகனங்கள் சாலைவிதிகளை கடைபிடிக்காமல் ஒன்றையொன்று முந்திச் சென்றும், அதிவேகமாகச் சென்றும் விபத்துகள் ஏற்பட ஏதுவாகிறது. நகருக்கு வெளியிலிருந்து வரும் வேகத்தைக் குறைக்-காமலேயே வாகனங்கள் நகருக்குள்ளும் அதே வேகத்தில் விரைந்து செல்வதால் சாலைவிபத்துகள் நேரிட ஏதுவாகிறது.

எனவே, தற்போதைய சாலை விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தினரும் வருவாய்த் துறையினரும் போலீசாரும் இணைந்து சாலையோர சாலையோர ஆக்கிர-மிப்புகளை அகற்றியும் பஸ்களை ஜனநெருக்கடியான கடைவீதியில் நிறுத்துவதற்கு தடைவிதித்து 

அனைத்துப் பஸ்களையும் பஸ்ஸ்டாண்டுக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வலியுறுத்தியும் நகருக்குள் நுழையும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தாமலும் வேகத்தைக் குறைத்து சீரான வேகத்தில் மட்டுமே செல்லவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு திருவையாறு நகருக்குள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து உதவுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோருகிறார்கள்.

Similar News