உள்ளூர் செய்திகள்
மினி பஸ் மேனேஜரை தாக்கிய அரசு பஸ் ஊழியர்கள்
தஞ்சையில் நேர பிரச்சினையால் மினி பஸ் மேனேஜரை தாக்கிய அரசு பஸ் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ ‘வைரல்’
தஞ்சாவூர்
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு டவுன் பஸ்கள், தனியார் பஸ்மற்றும் மினிபஸ்கள் இயக்கப்படு-கின்றன. இந்நிலையில் இன்று காலை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு செல்வ-தற்காக அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் மினி பஸ்சில் பயணிகள் ஏறினர்.அப்போது 2 பஸ்களில் யார் முதலில் செல்வது என்பது
தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே , வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி மினிபஸ் டிரைவர் உடனடியாக தங்களதுமேனே-ஜரை போனில் அழைத்து வர
வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேனேஜர் சிவா இதுகுறித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்-டரிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால்
ஆத்திரமடைந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் நேர கண்காணிப்பாளர் ஆகிய அரசு பஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மினிபஸ் மேனேஜரை தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை
நிலவியது. சிறிது நேரம் நடந்த இந்த தாக்குதல் பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது