உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளர் ஜவஹர் பொதுமக்களுக்கு மோர், பழங்கள் வழங்கினார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2022-04-18 15:43 IST   |   Update On 2022-04-18 15:43:00 IST
தூத்துக்குடி மத்திய மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் தூத்துக்குடி 4-ம் கேட் மற்றும் பொன்சுப்பையா நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மத்திய மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் தூத்துக்குடி 4-ம் கேட் மற்றும் பொன்சுப்பையா நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்ப துறை மண்டல செயலாளர் மணவை யோகேஷ் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். துணை செயலாளர் அக்பர் முன்னிலை வகித்தார்.

மத்திய மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா சங்கர், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சாமிக்-கண்ணு, தொழிலாளர்கள் அணிஅமைப்பாளர் ராஜா, நகர செயலாளர்கள் சேர்மதுரை, முருகன், ஒன்றிய செயலாளர் சிவகுமார், விஜயகாந்த், தவ புத்திரன், இளைஞர் அணி நகர அமைப்பாளர்ருபிஸ்டன்,  நற்பணி இயக்க நகர அமைப்பாளர்கள் மணிகண்டன், சங்கர், வட்ட செயலாளர்கள் மற்றும் மய்யம் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News