உள்ளூர் செய்திகள்
ஆனைமலை அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
குப்புச்சிபுதூர் வாய்க்கால் மேடு அருகே தென்னந்தோப்பில் பந்தைய சேவல் சண்டை நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆனைமலை:
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் சேவல் சண்டை போன்ற சூதாட்டங்களை தடுக்க போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று மாலை குப்புச்சிபுதூர் வாய்க்கால் மேடு அருகே தென்னந்தோப்பில் பந்தைய சேவல் சண்டை நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட ஒடையகுளத்தை சேர்ந்த விக்னேஷ், பிரகதீஸ்வரன், மற்றும் சுதாகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல் 350ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சேவல் சண்டை உள்ளிட்ட சூதாட்டத்தில் பல இளைஞர்கள் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே இதுபோன்ற சட்ட விரோத செயல்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து குற்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.