உள்ளூர் செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

கடையம் அருகே வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற 3 பேருக்கு அபராதம்

Published On 2022-04-18 15:33 IST   |   Update On 2022-04-18 15:33:00 IST
கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட அத்திரி மலையில் அனுமதியின்றி சென்று சுவாமி தரிசனம் செய்த 3 பேருக்கு வனத்துறை அபராதம் விதித்தது.
கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் கடையம் வன சரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர் கோவில் பீட் எல்லையில் அமைந்துள்ள அத்திரி மலைக்கு அத்துமீறிய திருக்கோவிலூரை சேர்ந்த ரங்கசாமி, ஆறுமுகம், ரமேஷ் சுவாமி தரிசனம் செய்வதற்காக வனப்பகுதிக்கு சென்றனர்.

இது சம்பந்தமாக அவர்களிடம் கடையம் வனச்சரக பயிற்சி உதவி பாதுகாவலர் ராதை விசாரணை நடத்தி வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி  அவர்களுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.

புலிகள் காப்பக எல்லைக்குள் உரிய அனுமதி வாங்காமல் செல்வது, வீடியோ புகைப்படங்கள் எடுத்து பகிர்வது, தீ சம்பந்தமாக பொருட்கள் கொண்டு செல்வது போன்றவைகள் வன உயிரின பாதுகாப்பும் தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News