உள்ளூர் செய்திகள்
இடி மின்னலுடன் மழை பெய்தது.
கரூர்:
தமிழகம் முழுவதும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
இதனால் 5 நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்தது சீதோசன நிலை நிலவியது. நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்-பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இரவு 7 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
7.30 மணி அளவில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கரூர் மாநகரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.