உள்ளூர் செய்திகள்
முகாமில் கூட்டமைப்பின் தலைமை நிலைய அதிகாரி செல்வகுமார் பேசிய காட்சி.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-04-18 15:05 IST   |   Update On 2022-04-18 15:05:00 IST
பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

முகாமினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் குத்துவிளக்கேற்றிவைத்து தொடங்கிவைத்தார்.  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பின் தலைமை நிலைய அதிகாரி செல்வகுமார், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கோவிந்தசாமி ஆகியோர் பேசினார்.

வேலைவாய்ப்பு முகாமில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் சிறப்பு பாடப் பிரிவுகளான யோகா, ஹிந்தி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரிய மாணவ,மாணவிகள் என ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளின் மனித வள மேம்பாட்டு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான 500 ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்து பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பிரேமலதா வரவேற்றார். முடிவில் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாந்தி நன்றி கூறினார்.

Similar News