உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட களைக்கொல்லி மருந்து பாட்டில்கள் மற்றும் மூட்டைகளை படத்தில் காணலாம்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 10 மூட்டை களைக்கொல்லி மருந்து- பாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-04-18 13:38 IST   |   Update On 2022-04-18 13:38:00 IST
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருச்செந்தூர்:

இலங்கையில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் கடல் காவல்நிலைய போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை வழியாக சுமார் 50 மீட்டர் தூரத்தில் 10 மூட்டைகளில் 3 பண்டல் வீதமாகவும், ஒரு பண்டலில் 12 பாட்டில்கள் வீதம் களைக்கொல்லி மருந்து இருந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News