உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 64). இவர் மோட்டார்சைக்கிளில் போச்சம்பள்ளி புலியூர் சாலையில் குள்ளனூர் பக்கமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்தவர், மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்தார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முனுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.