உள்ளூர் செய்திகள்
கொங்கணகிரி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தப்பெருமான் கோவில் உள்ளது. கோவிலில் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் கோபுரம், கிரிவலப்பாதை, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. கிரிவலப்பாதை அமைக்கப்பட்டதையொட்டி பவுர்ணமி தோறும் பக்தர்கள் கோவிலில் கிரிவலம் செல்கின்றனர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6 மணிக்கு திருப்பூர் சீராணம்பாளையம் ஓம் வேலவன் காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடந்தது.தொடர்ந்து கந்தப்பெருமானுக்கு சிறப்பு பூஜையை நடைப்பெற்றது.
பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.