உள்ளூர் செய்திகள்
இறந்த செல்வம் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

மதுரை சித்திரை திருவிழாவில் இறந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

Published On 2022-04-18 06:18 GMT   |   Update On 2022-04-18 06:18 GMT
மதுரை சித்திரை திருவிழாவில் உயிரிழந்த தேனி பக்தரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 42). டெய்லர் வேலை பார்த்து வந்தார்.

மதுரைசித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்து கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தார். இவருக்கு  சந்திரா என்ற மனைவியும், ஹர்சினி (16) என்ற மகளும், சுவிசன் (7) என்ற மகனும் உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்த செல்வம் குடும்பத்தினர் நிலையினை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்.

அதன்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட காசோலையினை இன்று மாவட்ட கலெக்டர் முரளிதரன், செல்வம் வீட்டிற்கே நேரடியாக சென்று அவரது மனைவி சந்திராவிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின் போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, வட்டாட்சியர் அர்ஜுனன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News