உள்ளூர் செய்திகள்
சென்னையில் அதிரடி வேட்டை- பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்ற மாணவர்களை மடக்கிய போலீசார்
சென்னையில் பள்ளி- கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:
சென்னையில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக அவ்வப்போது காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வழித்தடங்களில் சோதனை நடத்தி மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஆனால் மாணவர்களின் படிக்கட்டு பயணம் தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் பள்ளி- கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் சென்னை மாநகர் முழுவதும் இன்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாநகர பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை மடக்கி பிடித்தனர்.
தோளில் புத்தக பையை தொங்க விட்டுக் கொண்டு பயணிகளுக்கு இடையூறாகவும், சாலையில் செல்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்களை பஸ்களில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.
பின்னர் மாணவர்களின் பெயர், முழு முகவரி, அடையாள அட்டை, பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக வாங்கி போலீசார் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்கள் பற்றிய தகவல்களை பள்ளி முதல்வருக்கு கடிதமாக எழுதி அனுப்பினார்கள்.
சென்னையில் இன்று காலை அனைத்து பஸ் வழித்தடங்களிலும் இதனை போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர்.
படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்து கூறி போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். திருவொற்றியூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏட்டு எட்வின் ஆகியோர் பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் பஸ் வழித்தடங்களில் இன்று தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு முறைப்படி கடிதம் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடமும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கூடங்களுக்கு கடைசி நேரத்தில் பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்ற பெற்றோரை மடக்கி பிடித்தும் போலீசார் இன்று அறிவுரைகளை வழங்கினர். அவசரத்தில் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்தவர்கள், ஆட்டோக்களில் அதிகமாக மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிரைவர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று காலை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இதில் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.