உள்ளூர் செய்திகள்
நர்சிங் மாணவி அஜீதா

உத்தமபாளையம் அருகே ஜீப் மோதி நர்சிங் மாணவி சாவு

Published On 2022-04-18 11:32 IST   |   Update On 2022-04-18 11:32:00 IST
உத்தமபாளையம் அருகே ஜீப் மோதி நர்சிங் மாணவி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மகள் அஜீதா (வயது 21). இவர் மதுரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

சித்திரை திருவிழாவை-யொட்டி விடுமுறை அளிக்-கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பினார். விடுமுறை முடிந்து இன்றுகாலை மதுரைக்கு செல்வதற்காக தனது தாய், தந்தை மற்றும் சித்தியுடன் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளஅனு-மந்தன்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்த ஜீப் சாலையோரம் நின்றிருந்த அஜீதா குடும்பத்தினர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜீதா பலியானார்.

அவரது தந்தை ஆண்டிச்சாமி (59), தாய் ஈஸ்வரி (50), சித்தி புஸ்பா (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்-தினர் அவ-ர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீப் டிரைவர் சின்னமனூரைச் சேர்ந்த புவனேஸ்வரனை கைது செய்தனர்.

Similar News