குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்க வலியுறுத்தி நொச்சிகுப்பத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்
சென்னை:
மயிலை நொச்சிநகர் மீனவ குப்பத்தில் வசித்து வரும் மக்களுக்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1188 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகள் அங்குள்ள மீனவ மக்களுக்கு மட்டுமில்லாமல் பட்டினபாக்கத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரம் அடைந்த மயிலை-நொச்சிநகர் மீனவர்கள் இன்று திடீரென அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மீனவ பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் நொச்சிக்குப்பத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த பகுதியில் உள்ள மீனவர்களுக்காக கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு ஒதுக்க கூடாது. முழுவதும் நொச்சிநகர் பகுதி மீனவ மக்களுக்கு ஒதுக்க வேண்டும். மீனவர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.1.30 லட்சம் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.5 லட்சம் வரை கேட்கிறார்கள்.
சுனாமியால் வீடுகளை இழந்த 216 பேருக்கு இதுவரையில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த புதிய குடியிருப்பில் வீடுகள் வழங்க வேண்டும். அரசு மீனவர்களுக்கு குறைந்தபட்ச பங்களிப்புடன் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையும் படியுங்கள்... இளையராஜாவை அவமதிப்பதா? - பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்