உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைகாற்றுடன் பரவலாக மழை- 500 வாழைகள் சாய்ந்து சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மேட்டுத்தாங்கல் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இரவு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், பெனுகொண்டாபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மிதமான முதல் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீருடன், மழைநீர் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.
பர்கூர் பகுதியில் காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து மின் கம்பி மீது விழுந்ததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது.மேலும், மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர்ந்த சிதோஷ்ண நிலை காணப்பட்டது.
பெனுகொண்டாபுரத்தில் 63.40, போச்சம்பள்ளியில் 20.20, தளியில் 10, பாரூர், தேன்கனிக்கோட்டையில் தலா 9, அஞ்செட்டியில் 7.60, கிருஷ்ணகிரியில் 6.20, ஓசூரில் 5, ஊத்தங்கரையில் 3, சூளகிரியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ஊத்தங்கரை, கல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இரவு இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியதோடு ஆலங்கட்டி மழை பெய்தது.
இதில் மேட்டுதாங்கல் ஊராட்சி பச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 1.5 லட்சம் சேதம் ஏற்பட்டது.
அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரது ஓட்டு வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களும், இதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது இரண்டு ஏக்கர் நெல் பயிர்களும், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது தென்னை மரங்கள், வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதமானது.
இதுதவிர தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. ஒரு சில மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த இடி, மின்னல்,சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கனமழையால் வாழைமரங்கள், தென்னை மரங்கள், நெல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.