உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன் (கோப்பு படம்)

தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-04-17 23:19 GMT   |   Update On 2022-04-17 23:19 GMT
தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வெள்ளை அங்கி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது:-  

தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் 1,650 மாணவர்கள் சேர வேண்டும். ஆனால் 1,450 மாணவர்கள் சேர மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்தது.

அந்த இடங்களில் நீட் தேர்வு எழுதியவர்கள் சேர கடந்த 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

மாநில அரசால் நிரப்பப்பட வேண்டிய எம்.பி.பி.எஸ். இடங்கள், நிரப்பப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசின் இடங்கள் நிரப்பப்படவில்லை. 

எனவே தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 24 இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. 

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட டேப்லெட் வழங்கப்படும்.  

தமிழகத்தில் இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ்தான் உள்ளது. இறப்பு ஏதும் இல்லை. 

தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது 88 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஆனாலும் தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News