உள்ளூர் செய்திகள்
ராஜகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்.

ராஜகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

Update: 2022-04-17 09:51 GMT
வேளாங்கண்ணி ராஜகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பழமை வாய்ந்த ஸ்ரீரஜதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வினை தொடர்ந்து, சிவாச்சார்யார்கள் கொண்டு சிறப்புயாக பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் வைபவமும் காப்புக்கட்டு வைபவமும் நடைபெற்றது.

தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் திருமாங்கல்ய தாரணம் எனப்படும், மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News