உள்ளூர் செய்திகள்
இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு
பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகையை மாம நபர் பறித்து சென்றார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வைத்தீஸ்வரி வயது 26. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
பெரியசாமி கோரிபாளையம் ரிங் ரோட்டில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரி அவரது வீட்டில் தனியாக இருந்த போது யாரோ மர்ம நபர் கதவை தட்டி உள்ளனர்.
அப்போது வைத்தீஸ்வரி கணவர் தான் வந்து விட்டதாக எண்ணி கதவை திறந்து எட்டி பார்த்துள்ளார்.
அப்போது முகத்தில் துணியால் மூடிய மர்மநபர் ஒருவர் வைத்தீஸ்வரி மீது மிளகாய் பொடி தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்