உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

குறைசொல்வதை நாராயணசாமி நிறுத்த வேண்டும். அன்பழகன் அறிக்கை

Published On 2022-04-17 08:46 GMT   |   Update On 2022-04-17 08:46 GMT
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி:

தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ந் தேதியை, தை மாதம் 1-ந் தேதி என காரணம் கூறி கவர்னர் அழைத்த புத்-தாண்டு தினத்தை புறக்கணித்ததாக தி.மு.க.வினர் கூறியுள்ளார்கள். 

தமிழக தி.மு.க. ஆட்சியில் தை மாதம் 1-ந்  தேதியை தமிழ் புத்தாண்டாக தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின்  கொண்டாடவில்லை என்பதை கூட மறந்து விட்டு புதுவை தி.மு.க.வினர் கவர்னரின் தமிழ் புத்தாண்டு சித்திரை விழாவை புறக்கணிக்க பொய் காரணத்தை கூறியுள்ளனர். 

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்று எரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை இவற்றை வைத்து மிரட்டி சிலரை போட்டியிடாமல் செய்ததாகவும், சிலர் கட்சிமாறி போட்டியிட்டதாகவும் நாராயணசாமி குற்றம் சொல்கிறார். 

இது உண்மை என்றால் 5 காலம் முதல்&அமைச்சராக இருந்த நாராயணசாமியை மத்திய அரசின் எந்த அமைப்பு இவரை போட்டியிடாமல் மிரட்டினார்கள்? ஏன் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒட்டு-மொத்த காங்கிரசுக்கும் ஒரு பின்னடைவை ஏன் இவர் ஏற்படுத்தினார் என்பதை பகிரங்கமாக சொல்ல வேண்டும்.

எந்த அமைச்சர் எந்த பிரச்சனையில் லஞ்சம் வாங்கினார் என ஆதாரத்துடன் கூற நாராயணசாமி முன்-வருவாரா? எடுத்ததெற்கு எல்லாம் கவர்னரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். 

கடந்த 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்தவர் தனது ஆட்சியின் போதும் தன்னுடைய மலிவு விளம்பர அரசியலுக்காக கவர்னரை தினசரி விமர்சனம் செய்து மாநிலத்தின் வளர்ச்சியை 5 காலம் பின்னுக்கு தள்ளி விட்டார்.

தற்போது மாநில நலனுக்காசு கவர்னரும் இணைந்து செயல்படுவதை பொறுத்துக்    கொள்ள முடியாமல் குறை கூறுவதை நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News