உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது
நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கீழையூரை சேர்ந்த நாகராஜன் (65) மற்றும் வெளிப்பாளையத்தை சேர்ந்த டேவிட் என்கிற டேவிட் ஜான்சன் ஆகிய இருவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது.
இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்.பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.