உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரியில் பரிதாபம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-04-17 13:02 IST   |   Update On 2022-04-17 13:02:00 IST
கிருஷ்ணகிரியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகில் உள்ள கள்ளக்குறி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்(வயது49). இவர் கிருஷ்ணகிரி  ராயக்கோட்டை சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் மனைவி, ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்தார். கே.ஆர்.பி.டேம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார், இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றுள்ளார். 

அந்த நேரம் அவர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  உடனே அருகிலிருந்தவர்கள் பார்த்து அளித்த தகவலின்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த 7 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த 15 நாட்களாக மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News