உள்ளூர் செய்திகள்
திம்மராஜ்

கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் சில்மிஷம் செய்ததை தட்டிக் கேட்டவர் அடித்துக்கொலை

Update: 2022-04-17 07:30 GMT
கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் சில்மிஷம் செய்ததை தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை செய்யப் பட்டார்.
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த நாரணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது 37).
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அதே ஊரை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் நரசிம்மன் (40), சுமித்ராவிடம் சில் மிஷத்தில் ஈடுபட் டுள்ளார். இதையறிந்த சுமித்ராவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நரசிம்மனை கண்டித் துள்ளனர்.

அப்போது சுமித்ராவின் உறவினரான குடிசாதனப் பள்ளியை சேர்ந்த விவசாயி திம்மராஜ் என்பவர், நரசிம்மனை அடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 14 ந் தேதி மாலை நரணி குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திம்மராஜ் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது கார்மெண்ட்ஸ் கம்பெனி அருகே, திம்மராஜை தடுத்து நிறுத்திய நரசிம்மன், எப்படி நீ என்னை அடிக்கலாம்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது ஆத்திரமடைந்த நரசிம்மன், அங்கிருந்த கட்டையை எடுத்து திம்மராஜின் பின்னந்தலையில் அடித் துள்ளார். இதில் பலத்த காயமடைந்த திம்மராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 

இது குறித்து குருபரப் பள்ளி இன்ஸ்பெக்டர் அன்பு மணி, கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து தலைமறைவாக இருந்த நரசிம்மனை தேடி வந்தனர். நேற்று காலை அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திம்மராஜ் பரிதாப மாக உயிரிழந்தார். 
இதையடுத்து இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News